Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ம.க.வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

ஆகஸ்டு 07, 2023 10:41

குமாரபாளையம்: குமாரபாளையம் பா.ம.க.வில் மாற்றுக்கட்சியினர் இணைந்தனர்.
குமாரபாளையம் பா.ம.க.வில் மாற்றுக்கட்சியினர் 100 நபர்கள் இணையும் விழா கட்சி அலுவலகத்தில் நகர செயலர் கோவிந்தன் தலைமையில் நடந்தது.

இதில் புதிய உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலர் சுதாகர் புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கட்சியின் கொள்கைகள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும்  நிர்வாகிகள் சவுந்தர், சோமசுந்தரம் , ரவிக்குமார், எடுத்துரைத்தனர்.

இதனையொட்டி ஆதரவற்றோர் மையத்திற்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன் கட்சிக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. நிர்வாகிகள் ஜெயவேல், பாலு, சவுந்தரராஜன், கோடீஸ்வரன், சிவராமன், மாதையன், மணிவண்ணன் ,வேல்முருகன் உள்பட பலர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

தலைப்புச்செய்திகள்