Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெற்றிக்கொடி கட்டும் ஆறுமுகசாமி!

ஆகஸ்டு 07, 2023 06:06

‘குறள் வழியில் வாழ்வோருக்கு
நிறைவான வெற்றி வாய்க்கும்’

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிக அடிப் படையானது போக்குவரத்து கட்டமைப்பு மற்றும் சரக்குப் போக்கு வரத்து. கூடவே இவற்றுடன், பொருட் கள் பாதுகாப்பு கிடங்கு மேலாண்மை. இந்த 3 விஷயங்களும் துல்லியாக திட்டமிடப்பட்டு நடந்தால், உள் நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடும் இருக்காது. அவற்றின் மீதான விலையும் உயராது. 

இந்த வகையில், கடந்த சில தசாப் தங்களாக இந்தியாவில் சரக்குப்போக்கு வரத்து மற்றும் சரக்கு கிடங்குகள் மேலாண் மைத் தொழில் கோலோச்சி வருகிறது. நாட்டின் மிகப் பெரிய துறை முகங்கள், சரக்கு ரயில் முனை யங்கள் மற்றும் வேளாண் பொருட்கள் சேமிப்பு ஆகியவற்றில் இந்த சரக்குக் கிடங்குகள் மேலாண்மை, முக்கியத்துவம் பெற்றுக் கொண்டிருக்கிறது. 

இந்த வகையில், 2009ம் ஆண்டில் தமிழர் ஒருவர் தொடங்கிய ‘டீம் டிரான்ஸ் லாஜிஸ்டிக்ஸ்’ என்ற நிறுவ னம், இன்று நாட்டின் முக்கியமான 30 நகரங்களில், தன் கிளைகளைப் பரப்பி, தவிர்க்க முடியாத ஒரு நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. இன்னும் வளர்ந்து கொண்டிருக் கிறது. இந்த வெற்றி கரமான நிறுவனங்க ளுக்கு சொந்தக்காரர் ஆறுமுகசாமி. தென் தமிழகத்தின் முன்னணி தொழி லதிபர்களில் ஒருவரான ஆறுமுகசாமியிடம் வெற்றி ரகசியம் குறித்து கேட்டால், ‘திருக்குறள் வழியில் மேலாண்மை’ என்ற ரகசியத்தை உடைக்கிறார். திருக்குறளில் நமக்கு இல்லாத கருத்துக்களே இல்லை. சரியான திருக்குறளை பின்பற்றி, நம் தொழில் மேலாண்மையில் கையாண்டு வந்தால் வெற்றிநிச்சயம் என்கிறார்.

இதுதான் வெற்றியின் மந்திரம்:

ஒரு நிறுவனத்தின் மேலாண்மைக்கும், வெற்றிக்கும் சரியான திட்டமிடல் அவசியம். தகுதியான நபர்களை தகுதியான இடத்தில் பணி யில் வைப்பது என்பது, வணிகத்தின் வெற்றிக்கான சூத்திரமாகும். தொழிற்துறையில் இருப்போர், தங்களுக்கான இலக்குகள் மற்றும் எதிர்பார்ப்புகளை, இதுதான் தேவை. இப்படித்தான் நாம் உழைக்க வேண்டும் என்ற இலக்கு களை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். 

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா 
ஊக்கம் உடையான் உழை
- என்ற திருக்குறள் இதைதான் சொல்கிறது. தொழிலில் தளராத ஊக்கமும், உழைப்பும் யாரிடம் உள்ளதோ, செல்வம் அவரைத் தேடிச் செல்லும் என்கிறது. எனவே, தொழில் தொடங்கினால் மட்டும் போதாது, அதை முழு உத்வேகத்துடன் கொண்டும் செல்லும் வகையில் ஊக்கமும் அவசியம்.

அதேநேரத்தில், நம்முடன் தொழில் பங்கு தாரர்களாக இணையும் நபர்களுக்கும் இதே அளவு ஊக்கம், உத்வேகமும் இருப்பது அவசியம். அவர்களது பலம், பலவீனம் என்ன என்பதை அறிந்து அதற்கு ஏற்றார்போல் பணிகள் திட்ட மிடல், வணிகத்தை வெற்றி கரமாக்கும். அதே நேரத்தில், களத்தில் நம் வணிகத்தை வெற்றி கரமாக்குவது நம் பணியாளர்களே. இவர்கள் நியமனத்தில் கவனம் வேண்டும். ஒவ்வொரு செயலுக்கும் தகுதியான நபர்களை நாம் நம் பணியாளர்களாக நியமனம் செய்ய வேண்டும். நேர்மையும், தகுதியும் வாய்ந்த நபர்களை கணக்கர்களாக நியமிக்கலாம். சிக்கல்களை எளிதில் கையாளும் நபர்களை, திட்ட மேலாண்மை நபர்களாக நியமிக்கலாம். தகுதியான பணிகளில், தகுதியான நபர்கள் நியமனம் என்ப தும், வெற்றிக்கான அடிப்படைகளில் ஒன்றாகும்.

வறுமை...கல்வி...வளர்ச்சி...:

‘‘இன்று இந்தியாவில் எந்த ஒரு தொழிற் துறையில் முன்னணியில் இருக்கும் தொழில் முனைவோர், தொழிலதிபர்களை எடுத்துக் கொண்டாலும், அவர்கள் ஒரே நாளில் இந்த வளர்ச்சியை எட்டியிருக்க முடியாது. பல்வேறு கட்டங்களில் அவர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள எத்தனையோ வகையான போராட்டங்களை எதிர் கொண்டிருப்பார்கள். இந்த வகையில், நானும் விதிவிலக்கானவன் அல்ல’’ என்கிறார் ஆறுமுகச்சாமி.

தன் வாழ்க்கையின் கடினமான நாட்கள் தொடர்பாக ஆறுமுகசாமி கூறும் நினைவலைகள்...‘‘என் தந்தை உடையார் கோனார். தாய் ஆவுடைத்தாய். என்னுடன் பிறந்த சகோதரிகள் 7 பேர். நான் ஒருவன் மட்டுமே எங்கள் வீட்டில் ஆண் தலைமுறை. நாங்கள் பூர்வீகமாக இருந்தது கேரளாவின் மூணாறு பகுதி. அங்குதான் நான் பிறந்தேன். என் அப்பா வழி தாத்தாவின் பூர்வீகம், இப்போதைய தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள சூரங்குடி கிராமம்.

அம்மா வழித் தாத்தா வின் ஆலோசனைப்படி, என் பெற்றோர், இப்போதைய விருதுநகர் மாவட் டம் ராஜபாளையம் அருகே சேத்தூரில், என் 6வது வயதில் குடியேறினர். இதன் பின் என் அடையாளம் சேத்தூர் என்றாகி விட்டது. எங்கள் குடும்பம் தொடக் கத்தில் வறுமையில் இருந்தாலும், உழைப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. 

என் பெற்றோரும், சகோதரிகளும் கூலி வேலை செய்து, என்னைப் படிக்க வைத்தனர். என் மீதான நம்பிக்கையை அவர்கள் இழக்க வில்லை. நான் படித்த மாரிமுத்து நாடார் மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் முதன் மாணவனாக வெற்றி பெற்றேன். எங்கள் ஊர் அருகில் ராஜபாளையத்தில் ராஜூக்குள் கல்லூரி யில் பி.காம் பட்டம் பெற்றேன். இதில் நான் தங்கப் பதக்கம் பெற்று வெற்றி பெற்றேன். தங்கப் பதக்கம் வென்ற மாணவன் என்பதால் 1988-89ம் ஆண்டில் டிசிஐ என்ற சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தில், மாதம் 750 சம்பளத்தில் பணி கிடைத்தது. அப்போது இது கவுரவமான சம்பளம்தான்.

ஆனால், ஒரே இடத்தில் தேங்கிட விருப்பம் இல்லாமல் மெல்ல மெல்ல என் தகுதியை வளர்த்துக் கொண்டு, ரோடுவேய்ஸ் இந்தியாவில் 1995ல் மேலாளர் ஆக 3500 சம்பளத்தில் சேர்ந்தேன். அதனையடுத்து 2000வது ஆண்டில் பிபிஎஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆனானேன் என்றார்.

அனுபவம் தந்த தொழில்பாடம்:

டீம் டிரான்ஸ் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற வெற்றிகரமான நிறுவனத்தின் தலைவரானது பற்றி ஆறுமுகசாமி கூறும் போது, ‘‘1988 முதல் 2009ம் ஆண்டு வரை, சரக்குப்போக்குவரத்து, வணிகக் கிடங்கு மேலாண்மைத் துறை ஆகியவற்றில் 2009ம் ஆண்டு வரை ஓரளவு சிறப்பான அனுபவம் கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். இந்த அனபவமும், சிறந்த தொழில் பங்குதாரர்கள் கிடைத்த நிலையில், 2009ம் ஆண்டு உருவானதுதான் டீம் டிரான்ஸ் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம். 

தொடக்கத்தில் மாநிலத்தின் தலைநகரங் களைக் குறிவைத்து எங்கள் கிளைகளைத் தொடங்கினோம். முதலில் சென்னை, மும்பை, டில்லியில் தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனம், படிப்படியாக விரிவாக்கம் கண்டு, இப்போது நாட்டின் 30 வணிக முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில், வணிகத்தை திறம்பட மேற்கொண்டிருக்கிறது. இதுதவிர, மேலும் 2 நிறுவனங்களின் இயக்குனர் பதவியில் உள்ளேன்.

அதேநேரத்தில், இன்றைய போட்டி நிறைந்த உலகில், பெரிய அளவில் தொழில் நிறுவனங் களைத நடத்தி, அதில் வெற்றி பெறுவது என்பது மிகசவாலான விஷயங்களில் ஒன்றாகும். உங்கள் அருகாமையில் நீங்கள் யாரை வைத்துள்ளீர்கள் என்பதும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமாகும். 

நீங்கள் சோர்வடைந்த நேரங்களில் உங்களுக்க ஊக்கும், நம்பிக்கையும் கொடுப்பவர்கள் அருகில் இருப்பது அவசியம். இவைதான் நீங்கள் எதிர் கொள்ளும் போராட்டங்களை எளிதில் கடந்து செல்ல வழிகாட்டும்.

அதேநேரத்தில், மொழி தெரியாத புதிய மாநிலத்தில், நீங்கள் கிளைகள் தொடங்கும் போது, பன்மொழித் தெரிந்துள்ளவரின் தொழில் திறமை அங்கு தேவைப்படும். எனவே, நம் மாநிலத்தின் எல்லைகளைக் கடந்து, பிற மாநிலங்களில் தொழில் செய்யும்போது, மொழிப் புலமையும், உள்ளூர் நிலவரத்தைக் கண்டு, அதற்கு ஏற்றார் போல் செயல்படும் சாதுர்யமும் கொண்ட வர்களை உங்கள் அருகில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்’’ என்றார்.

அனுபவம் கொடுத்த தைரியம்:

தொழிலில் துணிச்சல் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு 2015ல் சென்னையில் ஏற்பட்ட மழை வெள் ளத்தை உதாரணமாக சொல்கிறார் ஆறுமுகசாமி. ‘‘தமிழகத்தின் தலை நகரான சென்னையை 2015ம் ஆண்டில் வரலாறு காணாத மழை வெள்ளம் உலுக்கியது. கூவம், அடையாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம், சென்னையின் பல பகுதிகளை திணற டித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம், தொலைத் தொடர்பு சேவை எல்லாம் துண்டிக்கப்பட்டது. 

இந்த இக்கட்டான காலகட்டத்தில் எங்கள் டீம் டிரான்ஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் பணியாளர்கள், அந்த மழை வெள்ளத்திலும் தளராமல் களம் இறங்கி, இரவு பகலாக உழைத்து, துண்டிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சேவைக்கு உயிர் கொடுக்கத் தொடங்கினர். எங்கள் நிறுவனத்தின் சேவையை அரசும், பல்வேறு அமைப்புகளும் பாராட்டியது, தொழிலில் எங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் அது. மேலும்  எங்கள் வளர்ச்சியின் அடையாளமாக பார்க்கப்பட்டது’’ என்றார்.

சரக்குப்போக்குவரத்தை எளிதாக்குவது இப்படித்தான்!

இன்று இந்தியாவில் 4 வழி, 6வழி மற்றும் 8 வழிச் சாலைகள் கனரக வாகனங்கள் பயன் பாட்டுக்கு வந்துள்ளன. இதனால், பொருட்களை, குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டியது அவசியமாகிறது. சரக்கு வாகனப் போக்குவரத்தின்போது ஏற்படும் தொலைத் தொடர்பு சிக்கல்கள் இப்போது எல்லாம் குறைந்துவிட்டது.

எங்கள் டிரைவர்களுக்கு லாரியில் உள்ள சரக்குகள் தொடர்பான ஆவணங்கள், வழித் தடங்கள் ஆகியவற்றை துல்லியமாக கொடுத்துவிடுவோம். இதனால், பயணத் தாமதம் தவிர்க்கப்படும். அத்துடன், எங்கள் இடத்தில் வாகனம் புறப்பட்டவுடன்  ஜிபிஎஸ் தொழில் நுட்பத்தின் உதவியுடன் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்போம். இந்த வகையில், எங்கள் நிறுவனத்தில் 400க்கும் அதிகளான தொழிலாளர்கள் சிறப்பாக பணி செய்கிறார்கள். அவர்களது உழைப்பும், நேரம் தவறாமையும், அர்ப்பணிப்பும் எங்கள் நிறுவன வளர்ச்சியின் வெற்றி ரகசியம் என்று சொல்ல வேண்டும்’’ என்றார்.

பொறுப்புகள் அதிகம்:

‘‘தொழில் நிறுவனத்தின் வளர்ச்சியுடன், சமூகத்தில் வளரத் தொடங்கும்போது, நம்மை அறியாமல் சில பொறுப்புகள் வரத் தொடங்கி விடும். அதற்கு ஏற்றார்போல், நம்மை நாம் செதுக்கிக் கொள்ள வேண்டும்’’ என்கிறார் ஆறுமுகசாமி. 

BEEKEYEN FREIGHT SERVICES PVT LTD என்ற ஏற்றுமதி / இறக்குமதி நிறுவனத்தின் இயக்குனர், அனைத்து வகையான வாகன டயர்கள் விற்கும்SRI SASTHA AGENCY, SRI SASTHA CAR CARE, ஆங்கில மருந்துகள் விற்பனை செய்யும் ACCORDT  PHARMACEUTICAL,  மாதவரத்தில் உள்ள AADVIK RESTAURANT, MADHAVARAM  ஊட்டியில் உள்ள AADVIK GUEST HOUSE  ஆகிய தொழில் நிறுவனங்களின் நிறுவனராக பதவியில் உள்ளேன். 

இவற்றின் வளர்ச்சியுடன், சமூகப் பொறுப்பும் வளர்ந்துள்ளது. ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்காக நிறைய உதவிகள் செய்து கொண்டிருக்கிறேன். இந்த வெற்றிக்கதையின் இன்னொரு பக்கம் முழுவதும் நிறைந்திருப்பது என் மனைவி கீதாதான்.  நாங்கள் சென்னையில் குடியேறி 30 ஆண்டுகள் ஆகிறது. என் ஒவ்வொரு வெற்றியின் பின்னணியில் உள்ளது மனைவி யின் ஊக்கமும், அர்ப்பணிப்பும்தான். 

இன்டர் நேஷனல் குளோபல் யூனிவர்சிட்டியின் கவுரவ டாக்டர் பட்டம், ஆல் இந்தியா ரிசர்ச் அச்சிவர் அமைப்பின் மதர் தெரசா தங்கப்பதக்கம் உட்பட பல விருதுகள் வந்தாலும், என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது என் மனைவி கீதாதான்.  தொழில் வளர்ச்சியுடன், சமூக சேவையுடன் கூடிய மற்ற வளர்ச்சியையும் முன்னெடுக்க வேண்டியது  கடமையாக உள்ளது’’ என்றார்.

தலைப்புச்செய்திகள்