Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாலை தரம் உயர்த்தும் பணிகள் துவக்க விழா

ஆகஸ்டு 09, 2023 03:49

நாமக்கல்: புதுச்சத்திரம் ஒன்றியம் திருமலைப்பட்டி ஊராட்சியில் நாகமநாயக்கனூர் முதல் தாண்டாகவுண்டனூர் சாலை வரை ரூ.76 லட்சம் மதிப்பீட்டில் 1.580 கி.மீ  சாலை தரம் உயர்த்தும் பணிகள் துவக்க விழா நடைபெற்றது.  

இதில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.பி.கௌதம், ஊராட்சி மன்றத் தலைவர் முத்துலட்சுமி ஜெகதீஷ், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் ராஜாராணி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும்  மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சசிக்குமார், கிளைக் கழக செயலாளர்கள் புகழேந்தி, நாகராஜ், நல்லதம்பி, பெரியசாமி, கோகிலன், சின்னகண்ணு, தங்கதுரை, மாதேஷ்வரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்