Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிக பாரங்களை ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகளால் வாகனவோட்டிகள் அச்சம்

ஆகஸ்டு 10, 2023 01:35

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் டிப்பர் லாரிகளில் அதிக அளவில் கற்களை ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகளால் விபத்து அச்சம் உருவாகியுள்ளது.

மல்லசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான மரப்பரை, கட்டிப்பாளையம், நாகர்பாளையம், குஞ்சாம்பாளையம், பெரியமணலி, கோக்கலை உள்ளிட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான ஏராளமான கல்குவாரிகள் காணப்படுகின்றது.

இந்த கல்குவாரிகளில் இருந்து கற்கள் வெடி மருந்துகள் மூலம் தகர்க்கப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு டிப்பர் லாரிகளில் விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். அவ்வாறு கொண்டு செல்லப்படும் டிப்பர் லாரிகளில் அளவுக்கு அதிகமாக பாராங்கற்களை கொண்டு செல்வதால் வேகத்தடை மற்றும் குண்டும், குழியுமான பகுதியில் வேகமாக செல்லும்போது கற்கள் சரிந்து கீழே விழுந்து லாரியின் பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் மீது விழுந்து உயிர்பலி கூட ஏற்பட வாய்ப்புள்ளது. 

ஆகவே, டிப்பர் லாரிகளில் சரியான அளவில் கற்களை ஏற்றி செல்ல குவாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்