Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போதை பொருள் மற்றும் கேலி வருது விழிப்புணர்வு கலந்தாய்வு

ஆகஸ்டு 10, 2023 01:43

ராசிபுரம்: ராசிபுரம் வநேட்ரா முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூஷனில் போதை பொருள் மற்றும் கேலி வதை விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 

ராசிபுரம் வநேட்ரா குழுமத்தின் ஓர் அங்கமான முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூஷனில் போதைப்பொருள் மற்றும் கேலி வதை விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

மேலும் கூட்டத்தில் போதை பொருள் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.பாலாஜி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் டாக்டா் ஆா்.மணி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கல்லூரி முதல்வர் பேசுகையில், மாணவர்களுக்கு படிப்பு என்ற நிலை ஒரு நிலை மட்டுமல்லாமல் மனநலம் மற்றும் உடல் நலம் இவற்றை பேணி காக்க வேண்டியது நமது ஒவ்வொருவருடைய கடமையாகும்.

போதை பொருள் மாணவர்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் என்பதையும் அவற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள நற்கருத்துகளை வலியுறுத்தினார்.

கல்லூரியின் இயக்குனர் ஆர்.செல்வகுமார் பேசுகையில், இக்கல்லூரியில் ஒழுக்கத்துடன் கூடிய கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வலியுறுக்கிறது. இந்நிகழ்ச்சியில் நாமகிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் கணேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்களுக்கு போதை பொருளால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், அவற்றிலிருந்து மாணவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

மேலும் மாணவர்களிடையே கேலி வதை இருக்கக் கூடாது என்றும் கேலி வதை செயல்பாடுகள் சட்டப்படி குற்றம் என்றும் இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கேலி வதை விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் எம்.பாலமுருகன் நன்றி நன்றி கூறினார். இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

தலைப்புச்செய்திகள்