Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொழில் முனைவோர் காணொளி காட்சிமாவட்ட ஆட்சியர் ச.உமா பங்கேற்பு

ஆகஸ்டு 11, 2023 12:39

நாமக்கல்: தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024 ”எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார் உயர்வை எய்திட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் இலக்கிணையொட்டி பன்னாட்டு முதலீடுகளோடு உள்நாட்டு முதலீடுகளையும் தமிழ்நாட்டுக்கு ஈர்த்தி அனைத்து முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 07.01.2024 மற்றும் 08.01.2024  ஆகிய இரண்டு நாட்கள் ”உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024” சென்னையில் நடைபெறவுள்ளது.

பெரிய தொழில்கள் மட்டுமன்றி, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியும் அவற்றுக்கான முதலீடுகளும் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைய பேருதவியாக அமையும் என்பதை உணர்ந்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் குறு சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களையும் பெருமளவில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள ஊக்கமூட்டி வருகிறார்.

அதன் தொடக்க நிகழ்வாக சென்னையில்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ”உலக முதலீட்டாளர் மாநாடு - 2024” க்கான இலச்சினை வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தொழில் முனைவோர்கள் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.

மேலும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஆர்வமுள்ள தொழில் முனைவோர், பொறியியல் வல்லுநர், உயர்நிலையிலுள்ள முதலீட்டாளர் போன்ற அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தமிழ் நாட்டின் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை பெரிதும் மேம்படுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அவ்வாறு தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் நிறுவனங்களால் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதுடன், வேலைவாய்ப்பற்ற இளையோர் பெருமளவில் பயனடைவர்.

மேலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும். வேலை வாய்ப்பிற்கும், நாமக்கல் மாவட்டத்தின் அளப்பரிய பங்களிப்பாகவும் அமையும். அவ்வாறு முதலீடு செய்யும் தொழில் நிறுவனங்கள் அரசின் பலதரப்பட்ட துறைகளிலிருந்து பெற வேண்டிய அனுமதிகள், உரிமங்கள் போன்றவையும் தமிழ்நாடு அரசு ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வரும் ஒற்றைச் சாளரத் தீர்வு முறையின் கீழ் இலக்குவாகப் பெற வழிவகை செய்யப்படும்.

தலைப்புச்செய்திகள்