Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முத்தாயம்மாள் கலைக் கல்லூரியில் கிளாசிக் தந்தூரி, சைனீஸ் சமையல் பயிற்சி

ஆகஸ்டு 14, 2023 10:59

ராசிபுரம்: ராசிபுரம் - வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல்
கல்லூரி (தன்னாட்சி)யில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை மாணவர்களுக்கு “சிவராஜ்
ஹாலிடே”வின் செஃப் கார்த்திக் (கல்லூரயின் முன்னாள் மாணவர்) தந்தூரி, சைனீஸ் உணவு வகைகள் மற்றும் தயாரிப்பு குறித்து பயிற்சி அளித்தார்.

மேலும் ஒரு உணவை அலங்காரமாக எவ்வாறு காட்சிப்படுத்துவது என்பதை விரிவாக எடுத்துக் கூறினார். 

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் இயக்குநர் - கல்வி முனைவர் இரா.செல்வகுமரன், 
முதல்வர் முனைவர் எஸ்.பி.விஜயகுமார், துணை முதல்வர் முனைவர் ஆ.ஸ்டெல்லா பேபி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பயிற்ச்சிப் பட்டறையை ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறைத் தலைவர் மோகன்ராஜ் மற்றும் துறை ஆசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தினர்.

தலைப்புச்செய்திகள்