Saturday, 29th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வலிப்பு வந்தவருக்கு உதவி செய்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு

ஆகஸ்டு 14, 2023 11:28

குமாரபாளையம்: திருச்செங்கோட்டில் நடந்து சென்ற நபர் வலிப்பு ஏற்பட்டு விழுந்தவருக்கு போலீசார் உதவி செய்தனர்.

திருச்செங்கோடு அருகே பரமத்தி சாலையில் நேற்று மாலை 3 மணியளவில் நடந்து சென்ற நபர் ஒருவர், திடீரென்று வலிப்பு ஏற்பட்டு சாலையில் விழுந்தார்.

இதனை கண்ட திருச்செங்கோடு போக்குவரத்து காவலர் சரண்யா, குமாரபாளையம் காவலர் திருமலைவாசன் ஆகியோர் உடனடியாக அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காவலர்களின் இந்த செயலை அனைவரும் பாராட்டினர்.

தலைப்புச்செய்திகள்