Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம்

ஆகஸ்டு 14, 2023 11:45

குமாரபாளையம்: எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் கல்லூரி வளாகத்தில்  நடைபெற்றது.

எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சமூக நலன் கருதி பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. 

அவ்வகையில் இரத்த தான முகாமினை நடத்தியது. இம்முகாமானது எக்ஸல் கல்விக் குழுமத் தலைவர் முனைவர் ஏ.கே.நடேசன், துணைத் தலைவர் டாக்டர் மதன் கார்த்திக் ஆகியோர் தலைமையிலும், எக்ஸல் கல்விக் குழும நிர்வாக இயக்குநர் முனைவர் K.பொம்மண்ணராஜா மற்றும் எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ரா.விமல்நிஷாந் ஆகியோர் முன்னிலையில் தொடங்கப்பட்டது.

நிகழ்வின் ஜி.ஹெச் ரத்த வங்கியவுடன் புரிந்து உணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமானது. முன்னதாக எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை பேராசிரியர் பெரியண்ணன் வரவேற்புரை நல்கினார்.

முகாமில் டாக்டர் ஏ.அன்புமலர் நாமக்கல் ஜி.எச் ரத்த வங்கி , ஜே சி ஐ  சந்திரசேகர், ஜே.சி.ஐ ஈரோடு சூப்பர் கிங்ஸ் தலைவர் ஏ.புத்துராஜா ரத்ததானம் மற்றும் தனி நபரின் சமூக சேவை மனப்பான்மை குறித்தும் எடுத்துக் கூறினார். சமூக நலன் கருதி கல்லூரி மாணவர்கள் முகாமில் 66 யூனிட் ரத்த தானம் வழங்கினார். 

இந்நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை  நலப்பணித்திட்ட திட்ட  அலுவலர் பாலசரவணன் மற்றும் இளைஞர் அணி சங்க அலுவலர் திரு சுதர்சனம் சாரண சாரணீய இயக்கிய ஒருங்கிணைப்பாளர் தீபிகா ஆகியோர் திறம்பட செய்திருந்தனர். நிகழ்வின் நிறைவாக இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் சுதர்சனம் நன்றியுரை வழங்கினார்.

தலைப்புச்செய்திகள்