Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதோஷத்தால் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்

ஆகஸ்டு 14, 2023 11:59

குமாரபாளையம்: பிரதோஷத்தால் குமாரபாளையத்தில் இறைச்சி கடைகள் வெறிச்சோடின.

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் மீன், கோழி, ஆட்டிறைச்சி கடைகள் அதிகம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நாளில் இங்கு இறைச்சி வாங்க குமாரபாளையம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் திரண்டு இறைச்சி வாங்கி செல்வது வழக்கம். 

அதை போல் பிரதோஷம் என்பதால், பெரும்பாலான பொதுமக்கள் பிரதோஷ வழிபாட்டிற்காக சிவன் கோவிலுக்கு செல்வதால், இறைச்சி கடைகளில் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடியது. இதனால் இறைச்சி வியாபாரிகள் மிகுந்த கவலைக்கு ஆளாகினர்.

இது குறித்து இறைச்சி கடையினர் கூறியதாவது, முன்பெல்லம் ஊருக்குள் வேறு இறைச்சி கடைகள் இருக்காது. தினசரி காய்கறி மார்க்கெட் பகுதிக்கு வந்துதான் இறைச்சி வாங்கி செல்வார்கள். ஆனால் தற்போது அந்தந்த வார்டு பகுதிகளில் ஆங்காங்கே ஒரு சில இறைச்சி கடைகள் வந்துவிட்டன.

அந்தந்த பகுதி மக்கள் அந்தந்த இடங்களில் இறைச்சி வாங்கி கொள்கிறார்கள். வாரத்தில் ஒரு நாள்தான் எங்களுக்கு வியாபாரம். அதுவும்  அமாவாசை, பிரதோஷம் என வந்திவிட்டால், எங்கள் வியாபாரம் மந்த நிலை தான். அதிக இறைச்சி வாங்கி வைத்து காத்திருந்து ஏமாறும் நிலை தான் எங்களுக்கு என்றனர்.

தலைப்புச்செய்திகள்