Saturday, 29th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் சாதித்த மாணவிகளுக்கு சுதந்திர தின விழாவில் நகர மன்ற தலைவர் பாராட்டு

ஆகஸ்டு 17, 2023 11:24

நாமக்கல்: குமாரபாளையம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 77 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மேலும் இப்பள்ளியின் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட
இவ்விழாவில் கலந்து கொண்ட நகர மன்ற தலைவர் த.விஜய்கண்ணன்,
7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில்  அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஆறு பேர் மருத்துவம் மற்றும் பொறியியல் துறையில் வெற்றி பெற்றுள்ளனர்.

அவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்து. சுதந்திர தின விழா மாறுவேட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், பள்ளியை தூய்மையாக வைத்திருந்த தூய்மை பணியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கினார்.

மேலும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள் நகர மன்ற தலைவருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் தமிழி,  நகர மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ், கனகலட்சுமி கதிரேசன், இனியா ராஜ், வேல்முருகன், பரிமளம் கந்தசாமி, சுமதி சந்திரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் பல உறுப்பினர்கள் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்