Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முத்தாயம்மாள் கலை கல்லூரியில் சர்வதேச இளைஞர்கள் தின விழா

ஆகஸ்டு 17, 2023 12:44

ராசிபுரம்: இராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிர்த்தொழில் நுட்பவியல் துறை சார்பாக சர்வதேச இளைஞர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. 

இவ்விழாவினை முன்னிட்டு மாணவ, மாணவியருக்கு பல்வேறு இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டன. 

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரியின் இயக்குநர் கல்வி முனைவர் இரா.செல்வகுமரன் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அவர்தம், உரையில் சர்வதேச இளைஞர்கள் தின விழாவின் முக்கியத்துவத்தைப் பற்றியும், சமுதாய முன்னேற்றத்தில் இன்றைய இளைஞர்களின் பங்கு குறித்தும் பேசினார். 

மேலும், இந்த விழாவில் மாணவர்களிடையே உரையாற்றிய துறைத் தலைவர் முனைவர் பொ.செல்வமாலீஸ்வரன், இளைஞர்கள் நல்வழியில் செல்ல சமுதாயத்தில் எவற்றையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை பற்றி விளக்கமாகப் பேசினார். 

இவ்விழாவில் துறைசார்ந்த மாணவ, மாணவியர் மற்றும் அனைத்துத் துறைப் பேராசிரியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்