Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாஜக சார்பில் தியாகி ஒண்டிவீரன் பகடை குரு பூஜை விழா

ஆகஸ்டு 21, 2023 12:20

நாமக்கல்: நாமக்கல்லில் பாஜக சார்பில் நடைபெற்ற தியாகி ஒண்டி வீரன் பகடை குருபூஜை விழாவில், மாநில பாஜ துணைத்தலைவர்கள் ராமலிங்கம், துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு, அவரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினா்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒத்தை ஆளாக சென்று ஆங்கிலேயப் படையை அடித்து விட்டிய வீரர் ஒண்டிவீரன் பகடை. இவரது 252 ஆம் ஆண்டு நினைவு நாள் குருபூஜை விழா, நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. மாவட்ட எஸ்சி பிரிவு தலைவர் ராஜா தலைமை வகித்தார்.

பொதுச்செயலாளர் கந்தசாமி வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் ராம்குமார், தமிழரசு, சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பாஜ துணைத்தலைவர்கள் டாக்டர் ராமலிங்கம், வி.பி.துரைசாமி, மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, எஸ்டி அணி மாநில தலைவர் சிவப்பிரகாசம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தியாகி ஒண்டிவீரன் பகடையின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன், நாமக்கல் நகர தலைவர் சரவணன், பாஜக நிர்வாகிகள் சுரேஷ் கண்ணன், அகிலன், முத்துக்குமார், ரவி, சேதுராமன், ஹேமா, செந்தில்நாதன், ரவி, வக்கீல் குப்புசாமி உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்