Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் கம்பன் கழகம் நடத்திய மாநில அளவிலான கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி

ஆகஸ்டு 21, 2023 12:27

நாமக்கல்: நாமக்கல் கம்பன் கழகம் ஆண்டுதோறும் கம்பன் விழாவை நடத்தி வருகிறனர்.

அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம் 11 வது ஆண்டு கம்பன் விழா மிகச் சிறப்பாக நாமக்கலில் நடத்தப்பட உள்ளது. இவ் விழாவை முன்னிட்டு நாமக்கல் சனு இன்டர்நேஷனல் ஹோட்டலில் உள்ள ரத்ன மாகாலில் கம்பன் கழகம் நடத்திய மாநில அளவிலான கம்பனில் இல்லறம், கம்பனில் வில்லறம், கம்பனில் சொல்லறம் ஆகிய 3 தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.

இதில் 40 க்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் பேச்சு திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு நாமக்கல் கம்பன் கழகம் தலைவர் வ. சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் பேராசிரியர் அரசு பரமேஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், கம்பன் கழகம் அமைப்பாளர் பசுமை தில்லை சிவக்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்,  

இப்போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு இரண்டாம் பரிசு மேலும் 10 சிறப்பு பரிசுகள் மாணவ, மாணவிகளுக்கு வரும் அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் கம்பன் கழக 11 வது ஆண்டு விழாவில் பரிசளிக்க தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளை தேர்வு செய்த நடுவர்களாக நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி முனைவர் கா. சந்திரசேகரன் , நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் மகளிர் அரசு கலைக் கல்லூரி முனைவர் ஜெயபாரதி, நாமக்கல் பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முனைவர் கு. உமா மகேஸ்வரி, ஆகியோர் போட்டியில் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து மாணவர் பேச்சாளர்களை தேர்வு செய்தார்கள் இதில் முதல் பரிசை பெறும் மாணவனாக நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவன் கோ.தினகரன், இரண்டாம் பரிசை பெறும் மாணவன் இராய வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியின் மாணவன் பி.விக்னேஷ் , மூன்றாம் பரிசை பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரியின் மாணவி பி.காருண்யா ஆகியோர் தேர்வு பெற்றார்கள் இவர்களுக்கு அக்டோபர் மாதம் நாமக்கலில் மிகப் பிரமாண்டாக நடைபெறும் நாமக்கல் கம்பன் கழக ஆண்டு விழாவில் இவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்