Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கூலி உயர்வு கேட்டு  அரசு மருத்துவமனை தூய்மை பணி தொழிலாளர்கள் தர்ணா

ஆகஸ்டு 25, 2023 11:55

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் 100 க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவ தூய்மை ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்களுக்கு போதிய சம்பள உயர்வு இல்லை பிடித்தம் போக ஈட்டுத்தொகை உள்ளிட்ட வசதிகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தரவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மாதமும் சம்பளம் இன்னும் வராத நிலையில் பணிபுரியும் பெண்கள் தொழிலாளர்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு முன்பு அமர்ந்து தர்ணா செய்து வருகின்றனர்.

மேலும் இவர்களுக்கு கொடுக்க வேண்டிய சலுகைகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் தருவதாக ஒப்புதல் அளித்து, ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை வழங்கவில்லை. இதற்கு சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகமும் சுகாதாரத்துறையும் இவர்களுக்கு ஆதரவளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் தர்ணாவில் ஈடுபட்ட தொழிலாளர்களால் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மருத்துவமனைகள் உள்ள குப்பை தொட்டிகள் குடிநீர் வசதி நோயாளிகள் படுக்கை தூய்மை செய்யும் பணி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தை நடத்தப்படாத நிலையில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்