Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்லூரி விழா கலியமூர்த்தி ஐ.பி.எஸ் பங்கேற்பு

ஆகஸ்டு 30, 2023 11:41

குமாரபாளையம்: சேலம் ,சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் ஒரு அங்கமான விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் மாணவியர் அசோஸியேஷன் துவக்க விழா  நடைபெற்றது.

துவக்க விழாவிற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றம் மருத்துவமனைகளின் தாளாளர் மற்றும் செயலர்  டாக்டர் மு.கருணாநிதி தலைமை தாங்கினார். 

நிர்வாக இயக்குனர்  கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், துணைத் தலைவர் டாக்டர். கிருபாநிதி கருணாநிதி, இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குநர் டாக்டர் குப்புசாமி, தலைமை செயல் அதிகாரிகள் பேராசிரியர் சொக்கலிங்கம், பேராசிரியர் வரதராஜீ, விவேகானந்தா கலை அறிவியல் மகளிர்  கல்லூரி முதல்வர் டாக்டர் பாலசுப்பிரமணியன், டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், ஐ.க்யூ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார், அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தழிழ்ச்செல்வன், வேலைவாய்ப்பு அதிகாரி  அருண்பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் சிறப்பு விருந்தினராக முன்னாள் காவல்துறை கண்கானிப்பாளர் டாக்டர் கலியமூர்த்தி, கலந்து கொண்டார். 16 துறைகளைச் சார்ந்த மாணவியர் அசோஸியேஷன் தலைவர் மற்றும் செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு பதவிப்பிரமாணம் மற்றும் உறுதியேற்பு ஆகியவற்றை சிறப்பு விருந்தினர் செய்து வைத்தார். பதவியேற்ற மாணவிகளுக்கு கிரீடம் அணிவித்து மலர்கொத்து வழங்கி கௌரவித்தார். 

ஐ.பி.எஸ் கலியமூர்த்தி தனது சிறப்புரையில், ‘மாணவிகள் கல்லூரிப் பருவத்தில் காதல் வயப்படக்கூடாது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அறிவுரைகளைப் பின்பற்றி ஒழுக்கத்துடன் வாழவேண்டும். சைபர் கிரைம் ஆய்வின் படி ஒவ்வொரு இளம் பெண்ணும் ஒவ்வொரு நாளும் 3 மணி முதல் 6 மணி நேரம் வரை கைபேசியில் தங்கள் வாழ்க்கையை வீணாக்குகிறார்கள். பன்னாட்டு அமேஸான் வெப் சொல்யூஷன் தலைவருடைய கைபேசி தகவல்களை சைபர் கிரைம் ஆசாமிகள் திருடி ப்ளாக் மெயில் செய்கிறார்கள்.

அப்படி இருக்க, தகாத வார்த்தைகளை மற்றவர்களுக்கு பெண்கள் கைபேசி மூலம் பகிர்ந்துகொள்ளும் போது உலகம் முழுக்க உள்ள சைபர் கிரைம் ஆசாமிகள் அதை பயன்படுத்தி பெண்களின் வாழ்க்கையைச் சீரழிக்கிறார்கள்; கைபேசி பழக்கதைக் கைவிட்டு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மாணவிகள் பின்பற்ற  வேண்டும்’ என்று குறிப்பிட்டார். 

மேலும் இந்த விழாவில் விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரி, விவேகானந்தா பார்மஸி மகளிர் கல்லூரி, இரவீந்தரநாத் கல்வியியல் கல்லூரி, விஸ்வபாரதி கல்வியியல் கல்லூரிகளைச் சார்ந்த 3 ஆயிரம் மாணவிகள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் டக்டர் பேபிஷகிலா, டாக்டர் ஆரோக்கியசாமி, டாக்டர் அழகு சுந்தரம் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்