Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  டிராக்டர் பேரணி நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு 

செப்டம்பர் 05, 2023 11:56

தென்காசி: தென்காசி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், கனிமவள கடத்தலை தடுக்க வேண்டும் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள செண்பகவல்லி அணையை சீரமைக்க வேண்டும், தற்போது செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தரணி சர்க்கரை ஆலை நிர்வாகத்தால் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை மனு அளித்தனர். 

மேலும் புளியங்குடி பகுதியில் எலுமிச்சைபழம் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும், சங்கரன்கோவில் பகுதியில் பூ மார்க்கெட் அமைக்க வேண்டும், மேக்கரை அடவிநயினார் அணையில் இருந்து சிற்றாறு வரை செல்லும் அனுமன் நதி ஆற்றை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் கடையநல்லூர் பகுதியில் இருந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை டிராக்டரில் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

முன்னதாக, இந்த டிராக்டர் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த சூழலில், நெல்லை சரக டிஐஜி தலைமையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் கடையநல்லூர் பகுதியில் குவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 இருந்தபோதும், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் போலீசாரின் தடையை மீறி கடையநல்லூரில் இருந்து தென்காசி வரை பேரணியாக வந்து மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.ரவிச்சந்திரனிடம் மனு அளித்தார்.

அதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர், இது தொடர்பான கோரிக்கைகள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
 

தலைப்புச்செய்திகள்