Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்திய மருந்தியில் ஆசிரியர்களின் அமைப்பு தமிழகத்தை சேர்ந்த திரு. எல். சத்தியநாராயணனுக்கு வழங்கியது

செப்டம்பர் 05, 2023 11:59

இந்திய மருந்தியில் ஆசிரியர்களின் அமைப்பு இந்த வருடத்தின் சிறந்த மருந்தியல் ஆசிரியர் விருதினை தமிழகத்தை சேர்ந்த திரு. எல். சத்தியநாராயணன் அவர்களுக்கு கான்பூரில் நடைபெற்ற  மாநாட்டில் வழங்கியது.

உத்தரபிரதேசத்தின் துணை முதலமைச்சர் மற்றும் மருத்துவ கல்வி அமைச்சர் திரு பிரஜேஷ் பதக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்திய மருந்தியல் கழக தலைவர் திரு மாண்டுகுமார் படேல் விருதினை வழங்கி கவுரவித்தார்.  தென்காசியை சேர்ந்த திரு சத்யநாராயணன் தற்போது புனையில் உள்ள பூனா காலேஜ் ஆப் பார்மசி என்னும் மருந்தியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் மருந்தியல் கல்வி கற்பிப்பது மட்டுமல்லாமல் மருந்தியல் துறை ஆராய்ச்சியில் 90க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் பிரசுரித்துள்ளார்.

பல்வேறு பன்னாட்டு மற்றும் உள்நாட்டு  கருத்தரங்குகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 80 க்கும் மேற்பட்ட மருந்தியல் துறை கல்வி மற்றும் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட உரைகள் நிகழ்த்தியுள்ளார். 06 மருந்தியல் கல்வி புத்தகங்கள் எழுதியுள்ளார். 06 ஆராய்ச்சி பட்டதாரிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரிகளை உருவாக்கியுள்ள இவரிடம் பல மருந்தியல் ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி கல்வியைப் பயின்று வருகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்