Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் ஐம்பெரும் விருது வழங்கும் விழா

அக்டோபர் 03, 2023 05:18

நாமக்கல்: நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகம், நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலக வாசகர் வட்டம், நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை ஆகியவை இணைந்து மகாத்மா காந்தி பிறந்தநாள், லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள், காமராஜர் நினைவு நாள், சிறந்த சேவையாளரை போற்றும் நாள் என ஐம்பெரும் விருது வழங்கும் விழா நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் தெரு தெருவில் உள்ள நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலக அரங்கில் நடைபெற்றது.

இதில் விழாவில் நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலக நூலகர் ப.செல்வம் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட நூலக அலுவலர் பொறுப்பு ச.தேன்மொழி துவக்க உரையாற்றினார்.

நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலக வாசகர் வட்ட தலைவர் முனைவர் டி.எம்.மோகன்  அறிமுக உரையாற்றினார். ஆன்மீக இந்து சமய பேரவை கௌரவத் தலைவர் சோழாஸ் பி.ஏகாம்பரம் தலைமை தாங்கினார். 

மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி  தாளாளரும், மோகனூர் அரிமா சங்க பட்டய தலைவருமான முனைவர் சு.பழனியாண்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருது வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

சேலம் சாதிப்போர் சங்க நிறுவனர், தன்னம்பிக்கை பேச்சாளர், வரலாற்று ஆய்வாளர், செந்தமிழ் தேனி செந்தில்குமார் மனங்களை வென்ற மகா ஆத்மா என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

 விழாவில் நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலக வாசகர் வட்ட புரவலர் தா.முகம்மது ரபி விருதாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். புள்ளம்பாடி ஆரம்ப சுகாதார நிலைய உதவியாளர் தியாகச் செம்மல் கார்கில் வீரர் சித்தி விநாயகம் உத்தமர் காந்தி விருது பெற்றார்.

தமிழ்நாடு தொலைபேசி ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் தோழர் பி.ராமசாமி எளிமையின் சிகரம் லால்பகதூர் சாஸ்திரி விருது பெற்றார். 

இந்நிகழ்ச்சியை நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை செயலாளர் செல்வ. செந்தில்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இறுதியாக நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகர் வாசகர் வட்ட பொருளாளர் அன்புச் செல்வன் நன்றி கூறினார். 

இந்நிகழ்ச்சியை நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை, நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலக வாசகர் வட்ட தலைவர் முனைவர் டி.எம்.மோகன், செயலாளர் செல்வ. செந்தில்குமார்,  பொருளாளர் சோழாஸ் ராசா, நூலகர் ப.செல்வம் பொருளாளர் சு.அன்புச்செல்வன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

தலைப்புச்செய்திகள்