Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு உதவி பெறும் பள்ளியில் மாலை நேர வகுப்பு துவக்கம்

அக்டோபர் 03, 2023 08:08

குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு உதவி பெறும் பள்ளியில்
மாலை நேர வகுப்பு துவக்கப்பட்டது.

குமாரபாளையம்  அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ நடுநிலைப் பள்ளியில் விடியல் ஆரம்பம் சார்பில் காந்தி பிறந்த நாள் விழா, மாலை நேர வகுப்பு துவக்க விழா, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாவாக நடத்தப்பட்டது.

காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக குமாரபாளையம் இன்ஸ்பெக்டர்  தவமணி பங்கேற்று,  மகாத்மா காந்தி மாலை நேர பயிலக கல்வி வகுப்பை துவக்கி வைத்தார்.

இன்ஸ்பெக்டர் தவமணி பேசியதாவது, அனைவருக்கும்  தரமான கல்வி கிடைப்பதற்கு அரசு முழு  முயற்சி  எடுத்து வருகிறது. கல்வித் தரம் உயர்ந்து வருவதால் அரசு பள்ளிகள்  சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  

அதன் மூலம் உலக அளவில் நமது கல்வியாளர்கள் உயர்ந்து வருகிறார்கள். ஆகவே இந்த மாலை நேர பயிலகத்தை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி வினா போட்டிகள் வைக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு இன்ஸ்பெக்டர் தவமணி, ஆசிரியை ஹெலன், பஞ்சாலை சண்முகம் பரிசுகள் வழங்கினர்.

முன்னதாக பள்ளியிலிருந்து ஊர்வலமாக சென்று மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து, காந்தி வழியில் நடப்போம் என மாணவ, மாணவியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

மாலை நேர பயிற்சி ஆசிரியைகள்  ராணி மற்றும் சித்ராவிற்கு தலைமை ஆசிரியை சுகந்தி பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

இனிய விழாவில் தீனா,  ஜமுனா மற்றும் ராம்கி மற்றும் உதவி கரம் அங்கப்பன்  உள்பட பலர் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்