Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ. 1 கோடியே 41லட்சத்து 59 ஆயிரம்  மதிப்பிலான பணிகள் துவக்கம்

அக்டோபர் 07, 2023 06:27

திருச்செங்கோடு: திருச்செங்கோடு தாலுக்கா எலச்சி பாளையம் ஒன்றியம் மண்டகபாளையம் பகுதியில் ஒன்றிய பொது நிதியில் இருந்து ஐந்து லட்சம் மதிப்பில் வடிகால் அமைத்தல் பணி, ரூ.7 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைத்தல் பணி, அகரம் ஊராட்சி ஓலப்பாளையம் கிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பரமத்தி சட்டமன்ற உறுப்பினர் சேகர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி2021–22 ல் ரூ.13 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்படும் அங்கன்வாடி மைய அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

மேலும் சின்ன எலச்சிபாளையம் பகுதியில் பரமத்தி சட்டமன்ற உறுப்பினர் சேகர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2022–23ல் ரூ 20 லட்சம் மதிப்பீட்டில் அமைய உள்ள சமுதாயக்கூடம் கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தொடர்ந்து மாவுரெட்டி பட்டி ஊராட்சியில் குடித்தெருவில் 15வது மானிய குழுமாவட்ட ஊராட்சி நிதி 2022–23ல் ரூ.6லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, மருக்கலாம் பட்டி ஊராட்சி வேலகவுண்டம் பட்டி பகுதியில் ஒன்றிய பொது நிதி ரூ 8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஆர்.ஓ பிளாண்ட் அமைக்கும் பணி ஆகியவற்றை முன்னாள் அமைச்சர் தங்கமணி  பூமி பூஜைசெய்து துவக்கி வைத்தார்.

இதே போல் இளநகர் பகுதியில் அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2, 2023–24ல் ரூ42லட்சத்து 90ஆயிரம் மதிப்பில் நடந்து முடிந்துள்ள பணிகளையும், மருக்கலாம் பட்டி ஊராட்சிபகுதியில் ரூ38 லட்சத்து 24ஆயிரத்து 800 மதிப்பில் அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2, 2023–24ல்  நடந்து முடிந்த பணிகளை பரமத்தி சட்டமன்ற உறுப்பினர் சேகர் உடன் சென்று பார்வையிட்டார்.

நிகழ்ச்சியின் போது பரமத்தி சட்டமன்ற உறுப்பினர் சேகர், எலச்சிபாளையம் ஒன்றிய தலைவர் ஜெயசுதா சக்திவேல்,மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சுகிர்தா பாலகிருஷ்ணன், ஒன்றிய அதிமுகசெயலாளர் சக்திவேல், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர், மற்றும் ஊராட்சி தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்