Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு பேரணி

அக்டோபர் 09, 2023 10:59

குமாரபாளையம்: குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தளிர் விடும் பாரதம் சமூக சேவை குழு இணைந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி குமாரபாளையத்தில் நடைபெற்றது.

விழிப்புணர்வு பேரணிக்கு மாசுக் கட்டுப்பாட்டு பொறியாளர் குணசேகரன் தலைமை வகித்து கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் உதயன் மற்றும் வாரிய அலுவலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

மேலும் தளிர் விடும் பாரதம் சார்பாக தலைவர் சீனிவாசன் மற்றும் உறுப்பினர்கள்,  எக்ஸல் கல்லூரி மாணவர்கள்,  சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

தமிழ்நாடு தகவல் ஆணையம் அக்டோபர் 5 ந் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தகவல் பெறும் உரிமைச் சட்ட வார விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  

அதன் அடிப்படையில் நடைபெற்ற இப்பேரணியில்,  தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ஒரு இந்திய குடிமகன் அரசு அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடு அறிக்கை,  சுற்றறிக்கை,  ஆவணம் ஆகியவற்றின் மூலம் எந்த விதமான தகவலாக இருப்பினும் அதனை உரிய மனு செய்து சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலரிடம் பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பேரணியானது குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகில் தொடங்கி J.K.K. ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி வரை சென்று நிறைவு பெற்றது.

பேரணியின் முடிவில் தளிர் விடும் பாரதத்தின் செயலாளர் பிரபு அனைவருக்கும் நன்றி கூறினார்.பேரணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை குமாரபாளையம் காவல்துறையினர் செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்