Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல்லில் செல்லப் பிராணிகளுக்கு இலவச  வெறிநோய் தடுப்பூசி முகாம்

அக்டோபர் 15, 2023 11:41

நாமக்கல்: நாமக்கல்லில்  நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

உலகில் குணப்படுத்தவே முடியாத, ஒரு உயிர் கொல்லி நோய் என்பது, வெறிநாய்க்கடியால் வரும் ரேபீஸ் எனும் நோய்தான். உலகம் முழுவதும் ஆண்டுக்கு 65 ஆயிரம் பேர் வரை இந்த நோயால் இறக்கின்றனர்.

இந்தியாவில் இந்த நோயால் ஆண்டுக்கு 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். அதே வேளையில், இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை பெற்றுக்கொண்டால், உயிர் பிழைத்து விடலாம் என்பதும் 100  சதவிகிதம் உண்மை. நாய்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் வெறிநோய் தடுப்பூசி (ஆண்ட்டி ராபீஸ்) போடுவதன் மூலம் இந்த நோய் பரவாமல் தடுக்க முடியும்.
நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு வெறிநாய் பரவுவதை தடுப்பதற்காக, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி சார்பில், செல்லப்பிராணிகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம், நேற்று 14 ஆம் தேதி சனிக்கிழமை, காலை  8 மணி முதல் மதியம் 2 மணி வரை, நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள, கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வீட்டில் உள்ள நாய், பூனை ஆகிய செல்லப்பிராணிகளை முகாமிற்கு அழைத்து வந்து, வெறிநோய் தடுப்பூசி போட்டு, வெறிநோய் பராமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்