Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உலக முட்டை தின கொண்டாட்டம் முன்னிட்டு அம்மா உணவகங்களில்  இலவச முட்டை வழங்கல்

அக்டோபர் 15, 2023 01:29

நாமக்கல்: உலக முட்டை தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் மார்கெட்டிங் சொசைட்டி, நாமக்கல் பவுல்ட்ரி டவுன் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நாமக்கல் பூங்கா ரோடு மற்றும் திருச்சி ரோடு பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் சாப்பிடும் அனைவருக்கும் இலவசமாக முட்டை வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

அம்மா உணவகங்களில்  நாள் முழுவதும் முட்டை வழங்கும் திட்டத்தை 
தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் மார்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணி துவக்கி வைத்தார்.

இதில் நாமக்கல் பவுல்ட்ரி டவுன் ரோட்டரி சங்க தலைவர்,  உறுப்பினர்கள் மற்றும் இன்னர் வீல் தலைவி மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தலைப்புச்செய்திகள்