Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மங்களபுரம் ஊராட்சியில் இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

அக்டோபர் 17, 2023 11:49

ராசிபுரம்: கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கழக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான K.R.N. இராஜேஸ்குமார் வழிகாட்டுதலோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.விஸ்வநாத்  மேற்பார்வையில் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரம் ஊராட்சியில் இல்லம் தோறும் இளைஞரணி புதிய ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. 

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் S.M.ரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.  இம்முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக நாமகிரிப்பேட்டை ஒன்றிய கழகச் செயலாளர் கே.பி.இராமசுவாமி  கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்து ஆலோசனைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் ஒன்றிய கழக நிர்வாகிகள் அவைத் தலைவர் மா.கருப்பண்ணன். துணைச் செயலாளர் M.S.அருள், பொருளாளர் தன்ராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பழனிசாமி, மாவட்ட தொழிலாளர் துணை அமைப்பாளர் சுரேஷ், ஜேடர்பாளையம் துணைத் தலைவர் இளையப்பன், மங்களபுரம் நிர்வாகிகள் சேகர், நடேசன், மணி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் அன்பழகன், முருகப்பன், சரவணன், சுந்தரம், தமிழ்குமரன், முருகேசன், வைத்திலிங்கம், கேசவன், இளைஞர் அணி நிர்வாகிகள் சக்திவேல், அறிவழகன், கோபி,  நவீன், ராஜ்குமார், அருண்குமார், பிரவீன் குமார், ஹரி பிரகாஷ், குரு, பழனி, தளபதி மற்றும் கழக மூத்த முன்னோடிகள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்