Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்செங்கோடு ஒன்றியத்தில் வணிக வளாக கட்டிடப் பணிகளை ஈஸ்வரன் எம்.எல்.ஏ துவக்கிவைத்தார்

அக்டோபர் 20, 2023 06:34

திருச்செங்கோடு: திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, திருச்செங்கோடு ஒன்றியம், விட்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் புதிதாக கட்டப்பட உள்ள வணிக வளாக கட்டிடத்திற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கொ.ம.தே.க பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு பணியினை துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு ஒன்றிய திமுக   செயலாளர் வட்டூர் தங்கவேல், KMDK நாமக்கல் மேற்கு மாவட்ட கொள்கைபரப்புச் செயலாளர் நந்தகுமார், திருச்செங்கோடு கிழக்கு ஒன்றிய செயலாளர் கோபால், திருச்செங்கோடு ஒன்றிய குழு துணைத்தலைவர் ராஜபாண்டி, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஜெகநாதன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க CSR உள்ளிட்ட சங்க பணியாளர்கள், திமுக பொறுப்பாளர் கணபதி மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்