Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொல்கத்தா முன்னாள் ஆணையர் ராஜீவ்குமாரை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்: உச்சநீதிமன்றம்

மே 17, 2019 08:05

புதுடெல்லி: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க, உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது. 

அதில், ராஜீவ் குமாரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கவும் ராஜீவ் குமார் சாட்சிகளை கலைத்து ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை காப்பாற்றுவதற்காக, ராஜீவ் குமார் முயற்சிப்பதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது. ஆனால் ராஜீவ் குமாரை துன்புறுத்துவதற்காகவே சிபிஐ காவலில் எடுக்க அனுமதி கேட்கிறது என அவரது வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இது குறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், ராஜீவ்குமாரை, சிபிஐ கைது செய்ய விதித்திருந்த இடைக்கால தடையை நீக்கி அதிரடி உத்தரவிட்டது. 

7 நாட்களில் கைது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் அதற்குள் உரிய நீதிமன்றத்தை அணுகி ராஜீவ்குமார் முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மேலும் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ராஜீவ்குமார் கைது தொடர்பாக சிபிஐ மற்றும் மேற்குவங்க அரசுக்கு இடையே கடும் மோதல் மூண்டது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்