Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சபரிமலை சென்ற இரண்டு பெண்கள் தடுத்து நிறுத்தம்- பம்பை திரும்பினர்

ஜனவரி 16, 2019 07:27

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள பாரம்பரிய வழிபாட்டு முறைகளுக்கு மாறாக, அனைத்து வயதுடைய பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக ஐயப்ப பக்தர்களும் இந்து அமைப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. 

இவ்வாறு பாதுகாப்புடன் செல்லும் பெண்களுக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர். இதனால் பல பெண்கள் தங்கள் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு திரும்ப நேர்ந்தது.  

இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ரேஷ்மா, ஷானிலா ஆகியோர் இன்று காலை பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பக்தர்கள் அந்த பெண்களை முன்னேற விடாமல் நீலிமலையில் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகரித்து. இதனால், 2 பெண்களும் போலீஸ் பாதுகாப்புடன் பம்பை திரும்பினர். 
 

தலைப்புச்செய்திகள்