Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் மாவட்டத்தில்  வளர்ச்சித் திட்டப் பணிகள்

நவம்பர் 02, 2023 11:46

நாமக்கல்: நாமக்கல், இராசிபுரம் மற்றும் புதுசத்திரம் ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்  ரூ.7.13 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை  பள்ளிக் கல்வித்துறை அரசு செயலாளர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜெ.குமரகுருபரன்,  பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். 

நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், போதுப்பட்டி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ரூ.198.00 இலட்சம் மதிப்பீட்டில் 9 வகுப்பறைகள், 1 ஆய்வகம், 2 கழிப்பறை அமைக்கப் பட்டுள்ளதையும், சின்ன முதலைப்பட்டி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ரூ.205.00 இலட்சம் மதிப்பீட்டில் 8 வகுப்பறைகள், 1 ஆய்வகம், கட்டும் பணி, இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் சந்திரசேகரபுரம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ரூ.162.00 இலட்சம் மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள், 1 ஆய்வகம் கட்டும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜெ.குமரகுருபரன் ஆய்வு மேற்கொண்டார். 

தொடர்ந்து, புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியம், ஓலப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 2 வகுப்பறைகள் கட்டும் பணி, தத்தாரிபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 4 வகுப்பறைகள், 1 ஆய்வகம் கட்டும் பணி என மொத்தம் ரூ.7.13 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருவதையும் பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜெ.குமரகுருபரன் ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வின் போது நடைபெற்று வரும் பணிகள் நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் விரைந்து முடிக்கப்பட்டு மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

இந்நிகழ்வில், முதன்மை கல்வி அலுவலர் பா.மகேஸ்வரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எ.அருள், உதவி செயற்பொறியாளர்  ஈ.இந்திராணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்