Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொசு பிடிக்கும் போராட்டம்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் வெற்றி

நவம்பர் 02, 2023 12:06

எலச்சிபாளையம்: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம். எலச்சிபாளையம் யூனியன் ஆபீஸ் முன்பு சாக்கடை கழிவு நீர் குட்டை போல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

இதனால் பல்வேறு தொற்று வியாதிகள் ஏற்படும் அபாயம் உருவாகியதால் எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய குழு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொசு பிடிக்கும் போராட்டம் யூனியன் ஆபீஸ் முன்பு நடத்தப்பட்டது.

பின்னர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம். அகரம் ஊராட்சி மன்றம் தலைவர் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் இரண்டு தினங்களாக கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும் இதனால் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

தலைப்புச்செய்திகள்