Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கழிவுப் பொருளிலிருந்து மை தயாரிப்பு

நவம்பர் 04, 2023 03:35

திருச்செங்கோடு: 31-வது தேசிய குழந்தைகள்அறிவியல்  மாநாடு  நாமக்கல் மாவட்டத்தில் நடந்தது. அதில் நாமக்கல் மாவட்ட அளவில் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல் பள்ளியிலிருந்து எட்டு ஆய்வுக்கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட அளவில் இருந்து கோயம்புத்தூரில் நடைபெறும் வட்டார அளவிலான இந்த அறிவியல் குழந்தைகள் மாநாட்டிற்கு  இப்பள்ளி எட்டாம் வகுப்பு  மாணவர்கள் கே கே .  ஹரிஷ் மற்றும் கே.ருமித்ரன் ஆகியோர் அடங்கிய குழுவின் ஆய்வுக்கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டது.

காற்றுக் கழிவான கார்பன் உள்ளிட்ட பொருள்களிலிருந்து மை தயாரித்தல் என்ற
தலைப்பின் கீழ் செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரையானது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மையை எழுதவும், கணினி பிரிண்டரிலும் பயன்படுத்தலாம். வீணான கழிவுப் பொருளிலிருந்து பயனுள்ள பொருள் தயாரிப்பது குறித்த இந்த மாணவர்களின் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த மாணவர்களையும், வழிகாட்டி ஆசிரியர் முனைவர் திருவருள் செல்வனையும் பள்ளித் தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியம், உதவித் தலைமை ஆசிரியை சத்யவதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்