Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெளிநாடு கல்வி சுற்றுலாவிற்கு  7 மாணாக்கர்கள் தேர்வு

நவம்பர் 04, 2023 04:04

நாமக்கல்: பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற கல்வி இணை / கல்விச் சாரா மன்ற செயல்பாடுகள் போட்டிகளில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் நவம்பர் 03 முதல் 09 வரை ஜப்பான் நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்லுவதற்காக 25 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் மற்றும் 2 அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வினாடி வினா போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் நவம்பர் 06 முதல் 11 வரை தென்கொரியா நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்லுவதற்காக 25 மாணவர்கள், 6 ஆசிரியர்கள் மற்றும் 2 அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

தென்கொரியா நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்லுவதற்காக நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி எஸ்.சுபிக்க்ஷா மற்றும் வீ.மேட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி வி.வித்யா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

மேலும், ஜப்பான் நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்லுவதற்காக வெண்ணந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி எஸ்.பிரீத்தா, சின்னமுதலைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவி யாழினி மற்றும் வேங்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவன் அபினேஷ் கண்ணன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் நாட்டிற்கு நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி அனன்யா யாழினி மற்றும் மலேசியா நாட்டிற்கு வேமன் காட்டுவலசு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் இளவரசன் ஆகியோர் கல்வி சுற்றுலா சென்று திரும்பியுள்ளார்கள். 

இதனைத்தொடர்ந்து, இராசிபுரம் வட்டம், முத்தாயம்மாள் கல்லூரியில் இன்று (03.11.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில், வானவில் மன்றம் / விளையாட்டு ஆகிய மன்ற போட்டிகளில் மாநில அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்று ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்லுவதற்காக தேர்வாகியுள்ள நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 5 மாணாக்கர்ளும், ஏற்கனவே சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாட்டிற்கு கல்வி சுற்றுலா சென்று திரும்பிய 2 மாணாக்கர்கள் என மொத்தம் 7 மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா பாராட்டுகளை தெரிவித்து, பரிசுகளை வழங்கினார். 

மேலும், தொழில்நுட்ப கல்வித்துறையின் சார்பில் ஆகஸ்ட் 2023 –ல் நடைபெற்ற அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாடத் தேர்வுகளான சுருக்கெழுத்து, கணக்கியல் மற்றும் தட்டச்சு பாடத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி கே.சினேகா அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் பாராட்டி, பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி முதல்வர் / நிர்வாக அறங்காவலர் மரு.கே.குணசேகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்