Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

மே 18, 2019 05:21

கேதார்நாத்: மக்களவை இறுதிக்கட்ட தேர்தல், நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை முடிவடைந்தது. மக்களவை தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, கேதார்நாத் கோவிலில் வழிபாடு செய்தார்.

முன்னதாக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் சென்றடைந்த பிரதமர் மோடி, பாரம்பரிய உடையில் கோவிலுக்கு நடந்து சென்றார். 4-வது முறை கேதார்நாத் கோவிலில்  பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்