Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

70 வயதைக் கடந்தவர்களுக்கு பஸ்களில் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்க கோரிக்கை

நவம்பர் 06, 2023 11:02

நாமக்கல்: தமிழகத்தில் 70 வயதைக் கடந்தவர்களுக்கு பஸ்களில் பயணம் செய்ய 50 சதவீத கட்டணச் சலுகை அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் 70 வயதைக் கடந்தவர்களுக்கு, பஸ்சில் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்று பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை கூட்டம், நாமக்கல் எஸ்.பி.எம் பள்ளியில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் புலவர் கருப்பண்னன் தலைமை வகித்தார். செயலாளர் ரகோத்தமன், பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நாமக்கல் நகரில் உள்ள தெருக்களுக்கு மறைந்த தலைவர்களின் பெயரை வைக்க வேண்டும், 70 வயது கடந்த பெரியவர்களுக்கு, பஸ் பயணத்தின் போது 50 சதவீதம் கட்டண சலுகை வழங்க வேண்டும், பேரவையின் சார்பில் திருவள்ளுவர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது, அன்றைய விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு புறநாணூறு புத்தகம் இலவசமாக வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கூட்டத்தில் இலக்கியப் பேரவை நிர்வாகிகள் அழகுசாமி, டால்பின் பாலு, வேலுசாமி, மாணிக்கம், மதியழகன், தங்கவேல், வக்கீல் பெரியசாமி, பழனிவேலு, நாச்சிமுத்து, சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ரயில்வே துறையில் சீனியர் சிட்டிசன்களுக்குஅளிக்கப்பட்ட சலுகைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கு முன்பு 60 வயதைக் கடந்தவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன. அதே போல் மாநில அரசு 70 வயதைக் கடந்தவர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்