Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

59 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு

மே 18, 2019 05:37


புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. 6 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. 7-வது இறுதிக்கட்ட தேர்தல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

பீகாரில் 8, ஜார்கண்டில் 3, சண்டிகாரில் 1, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, பஞ்சாப்பில் மொத்தம் உள்ள 13, உத்தரபிரதேசத்தில் 13, மேற்கு வங்காளத்தில் 9 என மொத்தம் 59 தொகுதிகளில் நாளை 7-வது இறுதிக்கட்டதேர்தல் நடக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி 7-ம் கட்ட தேர்தலை உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் சந்திக்கிறார்.

மேற்கு வங்காளத்தில் வன்முறையை காரணம் காட்டி நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு 9 தொகுதிகளில் பிரசாரத்தை தேர்தல் கமிஷன் முடிவுக்கு கொண்டு வந்தது.

எஞ்சிய 50 நாடாளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் நேற்று மாலை 6 மணிக்கு ஓய்ந்தது.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இமாசலபிரதேச மாநிலம், சோலனில் கடைசி கட்ட பிரசாரம் செய்தார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரபிரதேச மாநிலம், மிர்சாப்பூரில் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டார்.

தலைப்புச்செய்திகள்