Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொல்லிமலையில் காபி வாரியத்தின் சார்பில் கல்வி உதவி தொகை பெற அழைப்பு

நவம்பர் 09, 2023 06:23

சேந்தமங்கலம்: கொல்லிமலையில் காபி வாரியத்தின் துணை விரிவாக்க அலுவலர் சக்திவேல் வெளியிட்ட அறிக்கையில்,  கொல்லிமலை காபி வாரியத்தின் சார்பில் காபி தோட்டத்தில், காபி பதப்படுத்தும் தொழிற்சாலையில் பணிபுரியும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை மற்றும் ஊக்க தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் கொல்லிமலை காபி வாரியத்தில் வழங்கப்படுகிறது. 

இந்த ஆண்டு கல்வி உதவி தொகைக்காக பத்தாம் வகுப்பு படித்த பிளஸ்1 மாணவர்களுக்கு ரூ.2,250, கலை, அறிவியல் இளங்கலை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.3,750, கலை மற்றும் அறிவியல் முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.7,500, மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மருந்தாளுநர், செவிலியர் உள்ளிட்ட தொழில் நுட்பம் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.7,500 வழங்கப்பட உள்ளது. 

கல்வி உதவி தொகை பெற விருப்பமுள்ள மாணவர்கள் தேர்வு மதிப்பெண் சான்றிதழ், அடையாள அட்டை, சாதி சான்றிதழ், வங்கியின் சேமிப்பு கணக்கு புத்தகம், வேலை செய்யும் காபி தோட்டத்தின் சிட்டா, அடங்கல் உள்ளிட்ட நகல்களுடன் இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் 20 ஆம் தேதிக்குள் காபி வாரிய அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு கொல்லிமலை காபி வாரிய அலுவலகத்தின் 04286 247567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு துணை விரிவாக்க அலுவலர் சக்திவேல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்