Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தீபாவளியை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் விழா

நவம்பர் 11, 2023 11:25

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்த நடுக்கோம்பை பஞ்., துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு சீருடை, இனிப்பு வழங்கும் விழா நடந்தது. 

விழாவிற்கு பஞ்., தலைவர் விஜயபிரகாஷ் தலைமை வகித்து, நடுக்கோம்பை பஞ்., பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், துய்மை காவலர் பணியாளர்கள், உதவியாளர்கள் டேங்க் ஆப்ரேட்டர்கள், பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு சீருடை, இனிப்பு வழங்கினார். விழாவில் செயலாளர் கேசவன், துணைத்தலைவர், வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்