Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செக் மோசடி வழக்கில் ராசிபுரம் பெண் கவுன்சிலர் கைது

நவம்பர் 15, 2023 11:28

ராசிபுரம்: கோடிகணக்கில் பணமோசடி புகாரில் இராசிபுரம் 12 வது வார்டு பெண் கவுன்சிலர் சசிரேகா சதீஷ் நகராட்சியில்  இருந்து நாமக்கல் குற்ற பிரிவு போலீசார். அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

பெண் கவுன்சிலர் சசிரேகா மற்றும் அவரது கணவர் சதீஷ் ஆகியோர் இரட்டிப்பு பணம் ஆசை காட்டியும், ஹெலிக்காப்ட்டர் வாடகைக்கு விடும் தொழில் செய்வதாக கூறி முக்கிய பிரமுகர்களிடன் ரூ.2 கோடியே 50 லட்சம் பெற்ற வழக்கில் செக் மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் குற்ற பிரிவு போலீசார் பல முறை சம்மன் அனுப்பியும், கணவன் சதிஷ் மற்றும் மனைவி கவுன்சிலர் சசிரேகா விசாரணைக்கு ஆஜராகமல் தலைமறைவான நிலையில், ராசிபுரம் நகராட்சியில் நகர மன்ற கூட்டத்தின் உள்ளே இருந்த 12 வது கவுன்சிலர் சசிரேகாவை நாமக்கல் குற்ற பிரிவு துணை ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையில் தனிப்படை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியின் 12 வது வார்டு சுயேட்சை கவுன்சிலராக இருப்பவர் சசிரேகா.  இவருடைய கணவர் சதீஷ் .
இவர் மோகனூர் திமுக பேரூர் செயலாளர் செல்லவேல் (எ) செல்லப் பன்னிடம்  பணம் இரட்டிப்பு செய்து தருவதாகவும், குறைந்த வட்டிக்கு அரசியல்வாதிகளிடம் பல கோடி பணம் பெற்று தருவதாகவும் ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்து தொழில் செய்வதாகவும் கூறி நம்ப வைத்து சுமார் ரூ.2.50 கோடி மோசடி செய்ததாகவும், கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பணத்தை வீட்டில் வந்து  பெற்று மோசடி செய்தாக நாமக்கல் மாவட்ட குற்ற பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.  

இந்த புகாரின் அடிப்படையில் 12-வது வார்டு கவுன்சிலர் சசிரேகா மற்றும் அவருடைய கணவர் சதீஷ்க்கு நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவிலிருந்து பலமுறை சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஆஜராகாமல் தொடர்ந்து வழக்கை தட்டிக் கழித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக கணவன், மனைவி இருவரும் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.  

இந்நிலையில் நகர மன்ற கூட்டத்திற்கு சசிரேகா கையெழுத்து போட வருவதை அறிந்த குற்றப்பிரிவு போலீசார் நகராட்சியில் நடைபெற்றுக் கொண்டிருந்த நகர மன்ற கூட்டத்திற்குள் புகுந்து 12 வது  வார்டு சுயேச்சை கவுன்சிலர் சசிரேகாவை   விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் ராசிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இதுபோல் தமிழ்நாடு முழுவதும் முக்கிய அரசியல்வாதிகளிடம் பல கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாகவும், வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகவும், புகார் வந்ததைத் தொடர்ந்து போலீசார் கிடுக்குபிடி விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கவுன்சிலர் சசிரேகாவின் கணவர் சதீஷ் மற்றும் சதீஷ்னுடைய தந்தை வெங்கடாசலம் ஆகிய இருவரும் தலைமறைவாகி உள்ளதால் அவர்களைப் பிடிக்க மாவட்ட குற்ற பிரிவு போலீசார்  தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்