Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கட்டுமான பணிகளை பார்வையிட்ட மாவட்ட தி.மு.க.செயலர்

நவம்பர் 25, 2023 11:08

குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தி.மு.க. மாவட்ட செயலர் நேரில் பார்வையிட்டார்.

குமாரபாளையம் நகராட்சி பகுதியில் தார்சாலை, வாட்டர்  டேங்க் , பொது கழிப்பிடம், குடிநீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில் நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்வில் நகராட்சி தலைவரும், வடக்கு நகர செயலருமான விஜய்கண்ணன், நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், நகர தெற்கு தி.மு.க.செயலர் ஞானசேகரன், கவுன்சிலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.  

அம்மன் நகர் முதல் தேசிய நெடுஞ்சால இணைப்பு சாலைவரை உள்ள பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் தார் சாலை அமைக்கும் பணியை  நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார்.

தலைப்புச்செய்திகள்