Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியத்தில் உதயநிதி பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் 

நவம்பர் 30, 2023 04:24

குமாரபாளையம்: பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு குமார பாளையம் ஸ்ரீ கம்மத்துகாரர் சிறப்புப் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி பரிசு பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் நாச்சிமுத்து தலைமை தாங்கினார்.

நாமக்கல் மேற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் வேலுமணி,
நாமக்கல் மாவட்ட இந்து சமய அறங்காவல் குழு உறுப்பினர் சௌந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி, மரக்கன்றுகள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட இலக்கிய அணியின் துணை அமைப்பாளர் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஜான் பீட்டர், மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முரளி, பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி, தலைவர் முனைவர் விஜய்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்