Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாங்கள் காங்கிரஸ் உடன்தான் இருக்கிறோம்: தேவே கவுடா

மே 18, 2019 08:06

ஐதராபாத்: ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமி முதல்-மந்திரியாக உள்ளார். காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். இந்த ஆட்சி அமைந்து வருகிற 23-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர், சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்று பேசி வருகிறார்கள்.

இதற்கு கண்டனம் தெரிவித்த ஜனதா தளம் (எஸ்) மாநில தலைவர் எச்.விஸ்வநாத், சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு என்ன செய்தார்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு கடும் கோபம் அடைந்த சித்தராமையா, எச்.விஸ்வநாத்தை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்தார். சித்தராமையா மற்றும் குமாரசாமி இடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டிருப்பது, கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவே கவுடா திருமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அடுத்த பிரதமர் யார் என்று தெரியாத நிலையில், நாங்கள் காங்கிரஸ் உடன் தான் இருக்கிறோம். நான் எதையும் இது குறித்து பேச விரும்பவில்லை. 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரும். அப்போது தெளிவான படம் நாட்டிற்கு தெரியவரும் என்றார்.

தலைப்புச்செய்திகள்