Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல், பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்: சந்தீப் நந்தூரி

மே 18, 2019 09:20

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தொகுதியில் 257 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் வாக்குப்பதிவுக்கு தேவையான 350 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உரிய பரிசோதனைகள் நடத்தி முடிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன.  வாக்குப்பதிவு எந்திரம் அனைத்தும் இன்று (சனிக்கிழமை) பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு மண்டல அலுவலர்களால் கொண்டு செல்லப்படுகின்றன. 

இதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. பாதுகாப்பு பணியில் 3,000 போலீசார், 300 துணை ராணுவப் படையினரும் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்