Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு காந்தி, நேரு பிறந்த நாள் பேச்சுப்போட்டி

டிசம்பர் 07, 2023 12:14

நாமக்கல்: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நாமக்கல் மாவட்டத்தில், காந்தி மற்றும் நேரு பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி வருகிற 12 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவியருக்கு பேச்சுப்போட்டிகள், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில், காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறும். கலந்து கொள்ளும் மாணவ மாணவியர், காந்தியடிகள் நடத்திய தண்டியாத்திரை, வெள்ளையனே வெறியேறு இயக்கம், சத்திய சோதனை, மதுரையில் காந்தி போன்ற தலைப்புகளில் பேசி தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம்.

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நேரு பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 13ம் தேதி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப்போட்டிகள் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறும்.

போட்டியில் பங்குபெறுவோர், சுதந்திரப் போராட்டத்தில் நேரு, பஞ்சசீல கொள்கை, நேருவின் வெளியுறவுக் கொள்கை போன்ற தலைப்புகளில் பேசி தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம்.

இப்போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவ மாணவியருக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வீதம் வழங்கப்படும்.

போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மாணவ, மாணவியர், அந்தந்த கல்லூரி முதல்வரின் அனுமதியுடன் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வழியாக இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம்.

மேலும் விபரங்களக்கு, மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்- 04286 - 292164 ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்