Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலையை  லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியதற்கு ஈஸ்வரன் எம்.எல்.ஏ நன்றி

டிசம்பர் 15, 2023 05:51

நாமக்கல், டிச 15 : தமிழ்நாடு அரசு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பாலுக்கு பால் கொள்முதல் விலை கட்டுபடியாகவில்லை என்று விவசாயிகளும், பால் உற்பத்தியாளர்களும் தொடர் போராட்டங்கள் நடத்திக் கொண்டு இருந்தார்கள். சட்டமன்ற கூட்டத்தொடரிலும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டுமென்று கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசி இருந்தேன். 

ஆவின் நிறுவனத்தை விட தனியார் நிறுவனங்கள் பத்து ரூபாய் வரை அதிகமாக கொடுத்து கொள்முதல் செய்து வந்த நிலையில், தமிழ்நாடு அரசு தற்போது லிட்டருக்கு 3 ரூபாய் சேர்த்து வழங்க உத்தரவு பிறப்பித்திருப்பது வரவேற்க கூடியதாகும். அதே நிலையில் இன்னும் கூடுதலாக  5 முதல் 7 ரூபாய் வரை கொடுத்து இருந்தால் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து மீண்டு மகிழ்ச்சி அடைய வைத்திருக்கும். அரசு இதை கனிவுடன் பரிசீலனை செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

பால் உற்பத்தியாளர்களின் உண்மை நிலையை புரிந்து பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

தலைப்புச்செய்திகள்