Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

22-ந்தேதி விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி.-சி 46 ராக்கெட்: நேரில் பார்வையிட 1000 பேருக்கு வாய்ப்பு

மே 18, 2019 10:49

சென்னை: விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் குறித்த ஆர்வத்தை மாணவர்களிடம் ஊக்குவிக்கும் வகையிலும் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் நடவடிக்கைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வருகையிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஏப்ரல் 1-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி45 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டபோது அதை பார்வையிட முதன் முறையாக 1000 பேருக்கு இஸ்ரோ அனுமதி வழங்கியது.

இதற்காக இஸ்ரோ வளாகத்தில் விண்வெளி கண்காட்சியகம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையிலான திறந்தவெளி பார்வையாளர் மாடம், ராக்கெட், செயற்கைகோள், புகைப்பட கண்காட்சியகம் மறறும் இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் வரலாறு, தொழில்நுட்ப வளர்ச்சியை அறிந்து கொள்வதற்கான தகவல்கள் ஆகியவற்றை கொண்ட பூங்கா ஒன்றை இஸ்ரோ அமைத்துள்ளது.

வருகிற 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி-சி46 ராக்கெட் ஏவுதலை பொதுமக்கள் நேரில் பார்ப்பதற்கான முன் பதிவை இஸ்ரோ தொடங்கியுள்ளது. இதை பார்ப்பதற்கு 1000 பேர் வரை அனுமதிக்கப்பட உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்