Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம்

ஜனவரி 12, 2024 12:13

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த ஆய்வின் போது வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் நடைபெற்று வரும் அடிப்படை பணிகள், தூய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் செயல்பாடுகள், பள்ளிக்கல்வித்துறை மூலம் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் இல்லம் தேடிக்கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் இயக்கம், பள்ளிகளின் கட்டமைப்பு, பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் எடுக்கப்பட்டுள்ளன.

 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தமிழக அரசின் சிறப்பு திட்டமான நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ஆகியவற்றின் செயல்பாடுகள், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், முதலமைச்சரின் காலை உணவு செயல்படும் விதம் மற்றும் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், பட்டா மாறுதல் தொடர்பாக கோரிக்கை மனு அளித்த 14 பயனாளிகளுக்கும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக கோரிக்கை மனு அளித்த 02 பயனாளிகளுக்கும், சொத்துவரி பெயர் மாற்றம் தொடர்பாக கோரிக்கை மனு அளித்த 13 பயனாளிகளுக்கும், நத்தம் பட்டா மாறுதல் தொடர்பாக கோரிக்கை மனு அளித்த 4 பயனாளிகளுக்கும், நிலம் பட்டா மாறுதல் தொடர்பாக கோரிக்கை மனு அளித்த 1 பயனாளிகளுக்கும், வாரிசு சான்று தொடர்பாக கோரிக்கை மனு அளித்த 1 பயனாளிகளுக்கும், காலிமனை வரி தொடர்பாக கோரிக்கை மனுஅளித்த 1 பயனாளிகளுக்கும், இறப்பு சான்றிதழ் தொடர்பாக கோரிக்கை மனு அளித்த 1 பயனாளிகளுக்கும், புதிய சொத்துவரி விதித்தது தொடர்பாக கோரிக்கை மனு அளித்த 1 பயனாளிகளுக்கும், சொத்துவரி மற்றும் குடிநீர் பெயர் மாற்றம் தொடர்பாக கோரிக்கை மனு அளித்த 3 பயனாளிகளுக்கும், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் தொடர்பாக கோரிக்கை மனு அளித்த 1 பயனாளிகளுக்கும், மூன்று சக்கரம் வாகனம் தொடர்பாக கோரிக்கை மனு அளித்த 13 பயனாளிகளுக்கும், திருவண்ணாமலை நகராட்சியின் சார்பில் 4 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ. 3 இலட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டது.

மேலும், மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சக்கர நாற்காலி வழங்கும் திட்டத்தின் கீழ் 2 முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

இதனை தொடாந்து, கள ஆய்வில் திருவண்ணாமலை நகராட்சி, வளையல்கார தெருவில், வசிக்கும் நபருக்கு மக்களுடன் முதல்வர் முகாமில் கொடுக்கப்பட்ட மனுவினை பரிசிலீலனை செய்து பட்டா மாறுதலுக்கான ஆணையினை வழங்கியும், கடை எண்: 24, மற்றும் ஏந்தல் ஊராட்சியில் கூட்டுறவு கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு கரும்புடன் பொங்கல் தொகுப்பினை வழங்கி பொங்கல் வாழ்த்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார்,  அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு.பிரியதர்ஷினி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் விஜயபாபு, இணைபதிவாளர்  கோ.நடராஜன், துணைபதிவாளர் பொது விநியோக திட்டம் ப.ராஜசேகரன், துணைபதிவாளர் (பொறுப்பு) சித்ரா, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, ஆரணி வருவாய் கோட்டாட்சியர்  தனலட்சுமி, செய்யார் சார் ஆட்சியர்  பல்லவி வர்மா, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்