Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தி.மு.க. அரசு, தமிழர்களின் நலன்காக்கும் அரசு சபாநாயகர் அப்பாவு  பெருமிதம்

ஜனவரி 12, 2024 12:15

திருநெல்வேலி: தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை,  ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன்,  ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை அடங்கிய,  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிடம் திட்டத்தை, சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள டியூசிஎஸ் நியாயவிலை கடையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து,  மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்கள்,  உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், இந்த திட்டத்தை துவக்கி வைத்தனர்.

அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில், தன்னுடைய சொந்த தொகுதியான ராதாபுரம் தொகுதியில், பணகுடி தெற்கு ரதவீதியில் உள்ள நியாயவிலை கடையில், தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் [சபாநாயகர்] மு.அப்பாவு, இந்த திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞான திரவியம் ஆகியோர் முன்னிலையில், முற்பகலில் வைத்தார்.

அப்போது பேசிய சபாநாயகர்," இதுபோன்ற நலத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழர்களின் நலன்காக்கும் அரசாக செயல்படுகிறது! என்பதை, நாம் உணர்ந்து கொள்ளலாம்!"- என்று குறிப்பிட்டார்.

முன்னதாக,  அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி ஆகிய ஊர்களில் உள்ள நியாயவிலை கடைகளில், பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை, சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார்.

திசையன்விளையில்  தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற,  மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை,சபாநாயகர் அப்பாவு பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சிகளின் போது, சபாநாயகருடன், திருநெல்வேலி கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அழகிரி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் உமா மகேசுவரி, பொது விநியோக திட்டம் துண்ப்பதிவாளர் கார்த்திக் கவுதம், பணகுடி பேரூராட்சி தலைவி தனலட்சுமி,  ராதாபுரம் தாசில்தார் இசக்கி பாண்டி ஆகியோர், உடனிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்