Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குரு மலை, கோடந்தூர் மலை கிராம மக்கள் வீடுகள் வெள்ளத்தில் இடிந்து சேதம்

ஜனவரி 12, 2024 12:24

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட குறுமலை, குளிப்பட்டி, கோடந்தூர் உள்ளிட்ட 18 மலை கிராமங்கள் உள்ளன.

 முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக மலை கிராமங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மலை கிராம மக்கள் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது மண் சுவர்களால் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தது பல ஆண்டுகளாக இப்பகுதியில் வாழும் மலை கிராம மக்கள் கேரளா அரசு பழங்குடியின மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுத்தது போல தமிழக அரசும் தமிழகத்தில் வாழும் பழங்குடியின மக்களுக்கு  கான்கிரீட் வீடுகள் கட்டித்தர கோரிக்கை வைத்து வருகின்றனர்.

2006 வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தினால் தங்களுக்கும் கான்கிரீட் வீடு, சாலை, மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும்.

ஆனால் இப்பகுதியில் புலிகள் காப்பகம் உள்ளது என்ற காரணத்தைக் காட்டி வனத்துறை அதிகாரியில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்ய மறுத்து வருகின்றனர்.

தற்போது மலை கிராமத்தில் வாழும் பழங்குடியின மக்களுக்கு இடிந்த வீடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள்  ஆய்வு செய்து புதிய கான்கிரிட் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசு உடுமலை அமராவதி ஆனைமலை வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை இணைத்து ஆனைமலை புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது புலிகள் காப்பகம் என்ற காரணத்தைக் காட்டி வனத்துறை அதிகாரிகள் இப்பகுதி மலை கிராம பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய மருத்து வருகின்றனர்.

2006 வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த இப்பகுதி வனத்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர் தமிழக அரசு பழங்குடியின மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கைகள் எடுத்தாலும் வனத்துறை அதிகாரிகள்  புலிகள் காப்பகத்தில் இக்கிரமங்கள் வருவதால் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற ஒற்றை காரணத்தை கூறி மலை கிராம மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல் பழங்குடியின மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்