Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீலகிரி மாவட்ட தங்கும் விடுதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்: மாவட்ட காவல்துறை  

ஜனவரி 13, 2024 06:58

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் சொகுசு விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகள் மது அருந்த தடைசெய்யப்பட்டுள்ளது. 

தடையை மீறி மது அருந்த அனுமதித்தாலோ அல்லது பார்டி நடத்தினாலோ சம்பந்தப்பட்ட தனியார் விடுதியின் உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கபடும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து தனியார் தங்கும் விடுதிகளிலும் சுற்றுலா பயணிகளுக்கு தெரியும் வகையில் காவல்துறை கட்டுப்பாட்டு மையம் தொடர்பு எண் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் செல்போன் எண்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

தமிழக சுற்றுலா கழகம் அனுமதியுடன் செயல்பட்டு வரும் ஹோம் ஸ்டே விடுதிகளில் தங்கும் வெளிநாட்டினர் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் குறித்த விபரங்களை தினந்தோறும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நேரிலோ அல்லது இமெயில் மூலமாகவோ தெரிவிக்க வேண்டும்.

விடுதிகளில் அனைத்து பகுதிகளிலும் கட்டாயமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தி இருக்க வேண்டும். குற்ற பின்னணி உள்ளவர்கள், குற்ற செயல்களில் ஈடுபட்டு விட்டு வருவோர் தங்க அனுமதிக்க கூடாது எனவும்  மீறினால் சம்பந்தபட்ட தனியார் விடுதி உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்