Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

48வது இந்திய சுற்றுலா மற்றும் தொழிற் பொருட்காட்சியை தொடங்கி வைத்தார்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஜனவரி 13, 2024 07:03

சென்னை: சென்னை தீவுத்திடலில் உள்ள அறிஞர் அண்ணா கலையரங்கத்தில்,48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழிற் பொருட்காட்சியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

இதில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 51 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

அவற்றில் சிறப்பாக அரங்குகள் அமைத்த துறைகளான சிறைத்துறைக்கு முதல் பரிசும், இரண்டாம் பரிசு வேலைவாய்ப்புத்துறைக்கும், மூன்றாம் பரிசு தீயணைப்புத்துறைக்கும் அமைச்சர் உதயநிதி பரிசுகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், அமைச்சர்கள் சேகர்பாபு, சுப்ரமணியன் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி பள்ளி பருவத்தின் போது குடும்பத்தோடு சுற்றுலா பொருட்காட்சியை காண வந்துள்ளேன். அந்த சுற்றுலா பொருட்காட்சியை நான் தொடங்கி வைத்துள்ளது மகிழ்ச்சி. 

இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த துறை சார்ந்த அமைச்சருக்கு நன்றி.என்னுடைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பிலும் அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. 

அதில் துறை சார்ந்த சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது,இதே போல் கடந்த இரண்டரை ஆண்டு கால தமிழக அரசின் அனைத்து துறைகளின் சாதனைகளும் இடம் பெற்றுள்ளது. இந்த பொருட்காட்சி ஜனவரி  12, முதல் 71 நாட்கள் நடைபெறவுள்ளது என அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்